சுவிட்சர்லாந்தில் ஆண் ஒருவரின் சடலம் அழுகி உருக்குலைந்த நிலையில் ஆரே ஆற்றின் கரையில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று பட்டப்பகலில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆரே ஆற்றின் கரையில் ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடவியல் மருத்துவ பரிசோதனை அந்த நபருடைய அடையாளத்தை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறையினர் அந்த நபருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த வழக்கு குறித்து தற்போது அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் மற்றும் சோலோதர்ன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.