சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி மான் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு பெரியநாயகிபுரம் விலக்கு அருகே ஆண் புள்ளி மான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வன பாதுகாப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு போன்றோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையின் போது இரை தேடுவதற்காக நான்கு வழிச் சாலையை கடக்க முயன்ற மானை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கால்நடை மருத்துவர் சத்யா பிரபாகரன் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகு அருகில் உள்ள வனப்பகுதியில் அதிகாரிகள் மானின் உடலை புதைத்து விட்டனர்.