Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய் மீது தாயன்பு கொண்ட ஆண் குரங்கு…. வியப்படைந்த மக்கள்…. வைரலாகும் சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை குப்பையில் தூக்கி வீசுவதும் கொடூரமான முறையில் கொலை செய்வதும் அரங்கேறி வருகிறது. இப்படிப்பட்ட கொடூரர்களுக்கு கன்னத்தில் அறைந்தது போல் ஆண் குரங்கு ஒன்று நாய் குட்டியின் மேல் அதிகளவிலான பாசத்தை காட்டி எடுத்துக்காட்டாக இருக்கிறது. வேலூர் மாவட்டம் மேல்புளியங்குடி என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அந்த குரங்கு அந்த பகுதியில் அனாதையாக கிடந்த நாய் குட்டி ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றியுள்ளது.

மேலும் குரங்கு அந்த நாய் குட்டி மீது தீத அன்பும் அரவணைப்பும் செலுத்தி வந்துள்ளது. இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் நாய்க்குட்டியை குரங்கிடம் பிரித்துவிட வேண்டும் என்பதற்காக தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளனர். ஆனாலும் குரங்கு நாய் குட்டியை கீழே விடாமல் அவர்கள் சென்ற பிறகு அந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளது. அந்த நாயை ஒரு தாய் இடத்தில் இருந்து பார்த்து வருகின்றது. மேலும் அந்த நாய்க்குட்டி அதிக நேரம் கீழே விடாமல் எப்போதும் கையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |