தனிக்குடித்தனம் செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி என்னும் பகுதியின் அழகிய நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர்.மேலும் இவர் நாகர்கோவிலில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கணேசன் கடுக்கரை பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .
திருமணத்துக்குப்பின் கணேசன் தனது பெற்றோர் வீட்டில் மனைவியுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.தற்போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கணேசனுக்கு இரண்டு தங்கைகளும் உள்ளதால் பெற்றோர் அவரை தனிக்குடித்தனம் செல்ல வலியுறுத்தி உள்ளனர். இதன் காரணமாகவே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால மனமுடைந்த கணேசன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்,இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அக்குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது , இதுகுறித்து போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்