இந்தியா ,சீனாவை தொடர்ந்து மலேசியாவும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்துள்ளது .
ஆசியாவில் இருக்கக்கூடிய இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் நாட்டிற்குள் பிளாஸ்டிக்கு தடை விதித்தது மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளனர்.
இந்நிலையில் வளர்ந்த நாடுகள் இந்தியா சீனாவை தவிர்த்துவிட்டு தற்போது மலேசியாவை குறிவைத்து முறைகேடான வழிகளில் குப்பைகளை அனுப்பி வந்த நிலையில் மலேசியாவும் அதற்கு தடை விதித்து இனி இம்மாதிரியான செயல்கள் நடைபெற்றால் கப்பலை அப்படியே திருப்பி அனுப்பி விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.