மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றுள்ளார்.
மலேசியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து முகைதின் யாசின் பிரதமராக இருந்து வந்தார். அதன்பின்பு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து, கடந்த திங்கட்கிழமை அன்று பதவி விலகினார். இந்நிலையில் இவரின் அரசில் துணை பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி, ஆட்சியில் அமர தேவைப்படும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அதன்பின்பு மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, நாட்டின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரியை நியமித்திருக்கிறார். இந்நிலையில் தலைநகரான கோலாலம்பூரில் இருக்கும் அரண்மனையில் நேற்று மன்னர் முன்பு இஸ்மாயில் சப்ரி பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் ராணுவ மந்திரியாவும், ஐக்கிய மலாய் தேசிய கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கடந்த 1957- ஆம் வருடத்தில் மலேசிய நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 60 வருடங்களை தாண்டி, நாட்டை ஆட்சி செய்து வந்த ஐக்கிய மலாய் தேசிய கட்சியில் ஒருவர் மீண்டும் பிரதமராகியிருக்கிறார்.