ஆண் பெண் இருவரும் அணிந்து கொள்ளக்கூடிய காப்புறையை மலேசியா மகப்பேறு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
உலகிலேயே முதன் முறையாக ஆண் பெண் இருவரும் அணிந்து கொள்ளக்கூடிய காப்புறையை மலேசியாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த காப்புறைக்கு ‘வொண்டலீஃப் யூனிசெக்ஸ் காண்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் ஆண், பெண் இருவரும் உறவு கொள்ளும் போது பாலியல் நடத்தையை பாதுகாக்க உதவும் என்று மருத்துவர் ஜான் டாங் இங் சின் கூறியுள்ளார்.
மேலும் இது மேற்பரப்பில் பசையுடன் கூடிய வழக்கமான காப்புறை போன்று தான் இருக்கும் என்று டுவின் கேட்டலிஸ்ட் என்னும் மருந்துப்பொருள் விநியோக நிறுவனத்தின் மருத்துவர் டாங் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதில் ” இந்த காப்புறையானது பெண்ணுறுப்பு அல்லது ஆணுறுப்பில் ஒட்டிக் கொள்வது மட்டுமின்றி கூடுதலான பாதுகாப்பையும் அளிக்கும்.
இதில் ஒரு பக்கம் மட்டுமே பசை இருப்பதால் அதை உள் அல்லது வெளி பக்கமாக திருப்பி ஆண் அல்லது பெண் பயன்படுத்தலாம். அதிலும் இரண்டு வொண்டலீஃப் காப்புறைகள் உடைய ஒரு பெட்டியின் விலை 14.99 மலேசியா ரிங்கிட் ஆகும். குறிப்பாக 12 வொண்டலீஃப் காப்புறைகளின் விலை 20 முதல் 40 ரிங்கிட் என்று கூறப்படுகிறது. மேலும் காயத்திற்கு போடப்படும் கட்டுத்துணி தயாரிக்கப்படும் பாலியூரத்தீன் என்னும் வேதிப் பொருளால் இந்த காப்புறையானது உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒளிபுகாதன்மை கொண்டது. குறிப்பாக மென்மையானது மற்றும் நெகிழ்வுத்தன்மை உடையது. இருப்பினும் நீர்புகாத தன்மை மற்றும் வலிமை உடையது. இந்த காப்புறையானது டிசம்பர் மாதத்திலிருந்து டுவின் கேட்டலிஸ்ட் நிறுவனத்தின் இணையத்தில் பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.