தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று திரைப்பட தணிக்கை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள இரண்டு உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அவர்களின் நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் வெளிவருவதை நிறுத்துமாறு திரைப்படத் தணிக்கை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக திரைப்படத் தணிக்கை ஆணையம் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “ஆணும் பெண்ணும் இருவரும் உள்ளாடை அணிந்து இருப்பது போன்ற காட்சிகள் அல்லது விளம்பரங்கள் சமூகத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது.
மேலும் மலேசியாவில் வாழும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நாகரீகத்தை மதித்து நடக்கும் விதமாக இருத்தல் வேண்டும்” என்று உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகையால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து உள்ளாடை விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.