மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர் பகுதியில் அழகுமுத்து என்ற மளிகை கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பிறகு அழகுமுத்து மீண்டும் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கருங்காலக்குடி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அழகுமுத்தின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்கிருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விட்டது.
இதனால் படுகாயமடைந்த அழகுமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.