தேனியில் பழங்குடியின மக்களுக்கு காவல்துறை டி ஐ.ஜி அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
தேனி மாவட்டம் கூடலூருக்கு அருகில் பளியன்குடி என்கின்ற கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணத்தால் காய்கறி, அரிசி போன்ற அத்தியாவசிய பொருள்கள் இன்றி தவித்தனர். இதனையடுத்து இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு காய்கறி வியாபாரிகளும், லோயர் கேம்ப் காவல்துறையினரும், நேதாஜி அறக்கட்டளையினர்களும் முடிவு செய்தனர்.
அதன்படி திண்டுக்கல்லின் சரக டி.ஐ.ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அப்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.