ஜெர்மன் நாட்டில் மாலிக் புயல் தாக்கம் காரணமாக ஒருவர் பலியானதோடு இருவருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு அருகிலிருக்கும் பீலிட்ஸ் நகரத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு நபர் மீது போஸ்டர் விழுந்ததில் அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ப்ரெமனில் பலமான காற்று வீசியதில் மரம் சாய்ந்து விழுந்து, ஒரு பாதிரியாருக்கு காயம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் வடகிழக்கு மெக்லென்பர்க் என்னும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபர் விழுந்து கிடந்த மரத்தின் மேல் மோதி படுகாயமடைந்தார். சனிக்கிழமை மாலை நேரத்தலிருந்து பலமான காற்று வீசிக் கொண்டிருப்பதால் பெர்லின் பகுதியின் தீயணைப்பு படையினர், அப்பகுதியை சேர்ந்த மக்களை வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.