19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை 500 ரூபாய்க்கு நியாயவிலை கடைகளில் விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் பொதுமக்களுக்கு சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார். ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள பொதுமக்கள் நலன் கருதி 19 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 500 ரூபாய்க்கு நியாய விலை கடையில் விற்பனை செய்யப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள 29 ஆயிரத்து 486 நியாயவிலை பகுதிநேர கடைகளில் விற்பனை தொடங்குகிறது.
இவ்வாறு மாநிலம் முழுவதும் 10 லட்சம் சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 597 ரூபாயின் மதிப்பு உள்ள மளிகை பொருட்கள் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறப்பு தொகுப்பு பெற குடும்ப அட்டை அவசியமில்லை என்றும் அனைவருக்கும் இந்த தொகுப்பு விற்பனை செய்யப்படும் என்றும் அரசு கூறியிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் வெளி சந்தையில் மளிகை பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்படும் என்பது அரசின் நம்பிக்கையாகும்.