Categories
தேசிய செய்திகள்

ஐஆர்சிடிசி உடன் இணைந்த நிறுவனம்…. மலிவு விலையில் ரயில் டிக்கெட்!…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கம்மியான விலையில் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவுசெய்துக்கொள்ளலாம். அதே நேரம் வீட்டில் இருந்தவாறு ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது அதைவிட மலிவானதாக இருக்கும். அதற்குரிய வழிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்வோம். ஐஆர்சிடிசி-உடன் சேர்ந்து ஒரு நிறுவனமானது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகச்சிறந்த சலுகைகளை வழங்குகிறது. அண்மையில் HDFC வங்கியானது, ஐஆர்சிடிசி உடன் சேர்ந்து ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது.

இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.499 மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள கிரெடிட் கார்டாக இருக்கும். கார்டு வழங்கப்பட்ட 30 தினங்களுக்குள் இந்த அட்டை வாயிலாக ஏதேனும் பரிவர்த்தனை செய்யப்பட்டால், வெல்கம் பெனிபிட்டாக ரூபாய்.500 அமேசான் வவுச்சர் வழங்கப்படும். அதேநேரம் ரூபாய்.100 செலவு செய்தால் 5 ரிவார்டு புள்ளிகளும், ஸ்மார்ட்பை வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 5% கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும். இது தவிர்த்து ரயில் டிக்கெட் மட்டுமின்றி மற்ற இடங்களில் செய்யப்படும் பரிவர்த்தனை ஒவ்வொரு 100 ரூபாய்கும் 1 ரிவார்டு பாயிண்ட் வழங்கப்படும்.

இந்த கார்டில் இருந்து கிடைக்கும் வெகுமதிகளைப் பயன்படுத்தி பலவித பொருட்கள் மற்றும் சேவைகளை பெறலாம். அத்துடன் IRCTC இணையதளத்தில் பரிவர்த்தனைகள் செய்வதில் தள்ளுபடியைப் பெறலாம். பரிவர்த்தனை தொகை ரூபாய்.400 -ரூ.5000 வரை இருக்கவேண்டும். இதன் வாயிலாக ரூபே IRCTC கிரெடிட்கார்டை பயன்படுத்துபவர்கள் அதிகமான பயன்களை பெறுவார்கள். மேலும் இதன் வாயிலாக ரயில் நிலையத்தில் ஓய்வு அறையையும் பெறலாம். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி, ஒரு ஆண்டுக்கு 4 Railway Lounge பெறலாம்.

Categories

Tech |