Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த பூட்டு…. உரிமையாளர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மளிகை கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள நெசப்பாக்கம் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமசாமி வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த 38,000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது பற்றி ராமசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |