மளிகைக்கடையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேரப் போரட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மளிகைக்கடையானது பொன்னம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்த பிறகு பெருமாள் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் மறுநாள் காலை கடையை திறந்து பார்த்த போது அதிலிருந்து புகை கிளம்பியதை கண்டு பெருமாள் அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறிது நேரத்திலேயே மளிகை கடை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இது குறித்து தகவலறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணிநேரப் போரட்டத்திற்கு பிறகு மளிகை கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர் .
ஆனால் இந்த விபத்தில் மளிகை கடையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாகி விட்டது.இதனைதொடர்ந்து உடையாப்பட்டி பகுதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலும் தீ பிடித்தது. இதனையும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அணைத்தனர். இது குறித்து அம்மாப் பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.