Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய்க்கு 2 லட்ச ரூபாய் செலவா….? விமானத்தில் வந்திறங்கிய பெண்….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெண் ஒருவர் ஆடம்பரமாக செலவு செய்து நாய்க்குட்டியை அழைத்து வந்த வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் “மால்டீஸ்” என்ற உயர்ரகப் பிரிவு நாய்க்குட்டியோடு வந்துள்ளார். இதுகுறித்து விசாரித்ததில் அவர் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் தனது செல்லப் பிராணியான “பிலா” என்ற பெயர் கொண்ட அந்த நாய் குட்டியையும் தன்னோடு சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்ல விரும்பியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்மணி பிலாவையும் தன்னுடன் விமானத்தில் அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அதற்காக 12 சொகுசு இருக்கைகள் கொண்ட கேபினை பதிவு செய்து மொத்தமாக 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

அதோடு விமான நிலையத்தில் வந்து இறங்கிய அப்பெண்மணி தனது நாய்க்குட்டிக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை எனவும், நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளதற்கான சான்றிதழ்களையும் அங்கிருந்த அதிகாரிகளிடம் சமர்பித்துவிட்டு சென்றுள்ளார். பெண்மணியின் இந்த ஆடம்பரச்செயல் குறித்த வீடியோ வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் அந்தப் பெண்பயணி குறித்த எந்த விவரங்களையும் விமான நிறுவனம் வெளியில் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |