கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள , மல்யுத்த வீரரான சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, பரிசுதொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது .
ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார் அவருடைய நண்பர்களுடன், கடந்த 4 ம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கட் மற்றும் அவருடை நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாகரின் குடும்பத்தினர் , போலீசில் சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் வீரர் சுஷில் குமாரையும் ,அவருடைய நண்பர்கள் உட்பட 10 பேரையும் தேடி வருகின்றனர்.அதோடு இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான சுஷில் குமார் ஹரிதுவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மாறிக்கொண்டு, தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதனால் அவர் வெளிநாட்டிற்கு தப்ப முடியாத படி , டெல்லி போலீசார் அனைத்து விமான நிலையங்களிலும், லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் . அத்துடன் வீரர் சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள், ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில், டெல்லி நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்தது . அவரை பிடிப்பதற்கான பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வீரர் சுஷில் குமார் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு , ரூபாய் 1 லட்சம் பரிசு தொகையாகவும், அத்துடன் தப்பி சென்ற அவருடைய நண்பரான அஜய் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .