Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர்…. 4 பேரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோதத்தினால் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அகரதிருநல்லூர் காமராஜர் தெருவில் செல்வமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்தார். இதில் குமரேசனுக்கு திருமணம் முடிந்து சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசன் தனது உறவினரான சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென குமரேசனை வழிமறித்தனர். இதனையடுத்து 4 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குமரேசனை சரமாரியாக வெட்டினர்.

இதனால் படுகாயமடைந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக அறிந்த குமரேசன் உறவினர் மற்றும் நண்பர்கள் உடனடியாக அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது கோபமடைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.

அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இந்த கொலையை நேரில் பார்த்த குமரேசனின் உறவினரான சுசீலாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |