மருமகன் மாமனாரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மகேந்திரன் மாமனார் வீட்டிற்கு பேச வந்துள்ளார்.
இந்நிலையில் மகேந்திரன் மாமனார் லட்சுமணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் அரிவாளால் லட்சுமணனை வெட்டியுள்ளார். அதன்பின் சுதாரித்து கொண்ட லட்சுமணன் மருமகனை தாக்கியுள்ளார். இது குறித்து அளித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.