Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மாமியார் செய்த கொடுமை… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!!!

மாமியார் மற்றும் கணவர் செய்த கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருபுவனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் காலனியை சேர்ந்தவர் மதிராஜா (30) என்பவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமலா என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மதி ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. அதனை மறைத்து இரண்டாவதாக தன்னை திருமணம் செய்து கொண்டது அமலாவுக்கு தெரியவந்தது. இதுபற்றி அமலா தன் கணவரிடம் கேட்டபோதுஅவர் அமலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். அது மட்டுமின்றி மதி ராஜாவின் தாயார் வரதட்சணை கேட்டும் அமலாவை சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால் மிகவும் மனம் நொந்த அமலா நேற்று அதிகாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அமலாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த அமலாவின் பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவர்கள் தன் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி திருபுவனை போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சிணைக் கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |