மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கணேசன் சொத்து தொடர்பாக சண்முகவள்ளியை கொடுமை படுத்தியிருக்கிறார். இதனால் சண்முகவள்ளி கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி திருக்கோகர்ணம் அரசு அருங்காட்சியகம் அருகில் உள்ள வளர்மதியின் கடை முன்பு அவரை கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் கணேசன் வெட்டியுள்ளார். இதனைத் தடுக்க முயன்ற மனைவி சண்முகவள்ளியையும் வெட்டியுள்ளார். இதனால் வளர்மதிக்கும், சண்முகவள்ளிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த திருக்கோகர்ணம் காவல்துறையினர் கொலை முயற்சி, மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கணேசனை செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு கொடுத்துள்ளார். இதில் கணேசனுக்கு கொலைமுயற்சி பிரிவில் ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் கூறினார். இதனையடுத்து மனைவியை கொடுமைபடுத்தியதும் மற்றும் வெட்டியதற்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் அபராதம் கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து கணேசனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.