Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மனைவி…. ஆத்திரத்தில் கணவரின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மாமியாரை வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஆரோக்கியமேரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஐஸ்வர்யா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2-வதாக ஐஸ்வர்யாவை கருப்பசாமி என்பவருக்கு ஆரோக்கியமேரி மறுமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கணவருடன் வசித்து வந்த ஐஸ்வர்யா கடந்த 17-ஆம் தேதி திடீரென மாயமானார்.

இதுதொடர்பாக கருப்பசாமி தனது தம்பி முனியசாமியுடன் ஆரோக்கியமேரி வீட்டிற்குச் சென்று கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆரோக்கியமேரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆரோக்கியமேரியை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |