பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானைகளை குளோனிங் முறையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பனி நிறைந்த அதிக குளிருள்ள பிரதேசங்களில், “மம்மூத்” என்றழைக்கப்படும் யானைகள் வாழ்ந்திருக்கின்றன. இந்த யானைகளுக்கு ரோமங்கள் அடர்த்தியாகவும், தந்தங்கள் பெரிதாக வளைந்தும் இருந்துள்ளது. மேலும் இந்த யானைகள் அதிக உயரத்துடன் இருந்துள்ளது. எனினும் காலப்போக்கில் இந்த வகை யானையினம் அழிந்து போனது.
தற்போது, இந்த யானையின் புதைப்படிவங்கள் கிடைத்திருக்கிறது. ரஷ்ய நாட்டில் மம்மூத் யானையுடைய முழுமையான உடல் கிடைத்திருக்கிறது. எனவே குளோனிங் முறையை பயன்படுத்தி மம்மூத் யானைகளை மீண்டும் உருவாக்க, கடந்த சில வருடங்களாகவே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மரபியல் மற்றும் உயிரி அறிவியல் நிறுவனமான கொலோசல், ஹார்வர்ட் மருத்துவ பள்ளியினுடைய மரபியல் பேராசிரியர் ஜார்ஜ் சர்ச் அய்யர் மற்றும் தொழில் முனைவோர் பென் லாம், போன்றோர் சேர்ந்து 110 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை மேற்கொள்ளவுள்ளார்கள். இதற்காக, சைபீரியாவில் கண்டறியப்பட்ட மம்மூத் யானைகளின் புதைபடிவங்களிலிருந்து மரபணுக்கள் சேகரிக்கப்படுகிறது.
மேலும் இந்த மம்மூத் யானைகளை போன்றே வடிவத்தை கொண்டிருக்கும் ஆசிய யானைகளுடைய மரபணுவுடன் சேர்த்து கருவாக மாற்றி, செயற்கையான கருப்பையில் வைத்து மம்மூத் யானையை உருவாக்கவுள்ளோம் என்று சர்ச் தெரிவித்துள்ளார்.