Categories
இந்திய சினிமா சினிமா

நாகார்ஜுனா மகனுக்கு வில்லனாகும் மம்முட்டி…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனுக்கு மலையாள நடிகர் மம்முட்டி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவரைப் போலவே இவரது மகன் அகிலும் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து நடிகர் மம்முட்டி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நடிகர் மம்முட்டி ஏற்கனவே தெலுங்கில் ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதையான “யாத்ரா” படத்தில் ராஜசேகர ரெட்டியாக நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆகவே அவர் நாகார்ஜுனாவின் மகன் அகில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க சரியாக இருப்பார் என்று படக்குழு அவரை தேர்வு செய்துள்ளது.

Categories

Tech |