நடிகர் மம்முட்டியை நேரில் சந்தித்து நடிகர் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வது போல் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களான மம்முட்டி- மோகன்லால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கம் . மம்முட்டியின் படங்கள் ரிலீசாகும்போது மோகன்லால் ரசிகர்களும் மோகன்லாலின் படங்கள் ரிலீசாகும் போது மம்முட்டி ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வது வழக்கம் . மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக எடுக்கப்பட்ட படத்தில் முதல் பாதியில் வரும் மம்முட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும், மோகன்லாலை இடைவேளைக்குப்பின் முக்கியத்துவம் இல்லாத காட்சியில் நடிக்க வைத்து அவமதித்து விட்டதாக மோகன்லால் ரசிகர்கள் பொங்கி எழுந்தனர் .
With Ichakka pic.twitter.com/gKn6d8auMR
— Mohanlal (@Mohanlal) January 7, 2021
இதையடுத்து அந்தப் படத்தை புறக்கணிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர் . ஆனால் நடிகர் மம்முட்டி மற்றும் நடிகர் மோகன்லால் இடையே நல்ல நட்புறவு இருப்பதாக கூறப்பட்டு வந்தது . இந்நிலையில் இதை நிரூபிக்கும் வகையில் கொச்சியில் புதிதாக கட்டியுள்ள மம்முட்டியின் வீட்டிற்கு நடிகர் மோகன்லால் திடீர் விசிட் அடித்துள்ளார் . அங்கு இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர் . தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.