மாம்பழங்களை அளவோடு சாப்பிடுவதால் ஏற்படும் விரிவான செய்தி தொகுப்பு…!
நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அளவுக்கு அதிகமான நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை மேம்படுத்தி மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25% விட்டமின் “ஏ” சத்து ஒரு கப் நறுக்கிய மாம்பழம் சாப்பிட்டால் கிடைத்து விடும். இதனால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
மாம்பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.எனவே ப்ரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து இரத்தப் புற்றுநோய் வரை பல வகையான புற்றுநோய்களுக்கு எதிராக போராடும் குணமும் இதற்கு உண்டு.
மாங்கனியில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் 86 கலவைகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக எடுத்துக் கொள்ளும்.
எடை அதிகமுள்ளவர்கள் அளவாக சாப்பிடுவது நல்லது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் மிகக் குறைவாக சாப்பிடுவது நல்லது.
மாம்பழத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் மாம்பழங்களை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்து அதிக அளவில் தேவைப்படுவதால் அவர்கள் மாம்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
மாங்கனி சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் சீராகி உடல் நலம் மேம்படும்.
மாம்பழத்தில் உள்ள விட்டமின் “B6” மூளையின் செயல்பாடு அதிகரிக்க உதவுகிறது.
இதில் அதிக அளவில் உள்ள பீட்டா கரோட்டின், கரோட்டின் மற்றும் விட்டமின் “சி” உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை வலிமைப் படுத்தி, உடலை தொற்று நோய்களிலிருந்து காக்கிறது.
மாம்பழத்தில் கிருமிகளை அழிக்கும் கொண்டதால் அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புகள் நன்றாக செயல்படும். நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளன என்றாலும், அளவாக எடுத்துக் கொண்டால் நல்லது. ஏனென்றால் அதிகமாக சாப்பிடும் போது சிலருக்கு உடல் சூட்டையும் அதிகரிக்கும்.