Categories
கிரிக்கெட் விளையாட்டு

”மம்தா பானர்ஜி எனக்கு அக்கா” தாதா கங்குலி அதிரடி …!!

பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு எதைக் குறிக்கிறது?

முதன்முறையாக நான் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு நேரில் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். இது முற்றிலும் மரியாதை நிமித்தமானது.

எதிர்காலத்தில் பிசிசிஐ-ல் இருந்து அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா?

(ஒரு சின்ன புன்னகையுடன்) அரசியல் எங்கு தான் இல்லை? இந்தியாவில் மிகவும் முக்கியம் அது! நம் நாட்டின் எல்லாத் துறைகளிலும் அரசியல் இருக்கிறது. அதைப் பற்றி பேச தயக்கம் இல்லை.

பிசிசிஐ குறித்த எதிர்காலத் திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பாடுபடுவேன்.

பிசிசிஐயின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் மம்தா என்ன தெரிவித்தார்?

மம்தா பானர்ஜி முதலமைச்சர் ஆவதற்கு முன்பே எனக்கு நன்கு அறிமுகமானவர். நான் பிசிசிஐயின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரின் மனமார்ந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். மம்தா பானர்ஜி மீது எனக்கு அளப்பரியப்பற்று உள்ளது. அவர் எனக்கு முதலமைச்சர் என்பதையும் தாண்டி, சொந்த அக்கா போன்றவர்.

Categories

Tech |