மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார்.
வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிடால்குச்சி என்ற பகுதியில் தேர்தல் பொதுக்கூட்ட பிரச்சாரம் நடைபெற்றது.அதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது நடந்து முடிந்துள்ள 2 ஆம் கட்ட தேர்தல் வாக்களிப்பில் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து தனது வாக்குகளை பதிவு செய்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது .
பா.ஜ.க 60 தொகுதிகளில் 50 தொகுதிகளிலாவது வெற்றி பெறும் என்று உறுதியாக கூறியுள்ளார். மம்தா பானர்ஜியின் அரசு இத்தேர்தலில் தோல்வியுறுவது நிச்சயம் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நந்திகிராமம் பகுதியில் எதிர்த்துப் போட்டியிட்ட மம்தா பானர்ஜி வெற்றி பெற போவதில்லை என்பதும் உறுதி அதில் எவ்வித மாற்றமும் இல்லை.
வடக்கு பகுதி வங்காளக் மக்களுக்கு மம்தா பானர்ஜி இதுவரை எந்த நன்மையும் செய்ததில்லை அத்தொகுதியில் போட்டியிடவும் அவர் விரும்பவில்லை .மேலும் சிடால் குச்சியில் சாலை அமைப்பதற்காக நரேந்திர மோடியின் அரசு 22 கோடி ரூபாய் சாலையை சரிசெய்ய கொடுக்க முன்வந்தபோது அதனையும் மம்தா பானர்ஜி தவிர்த்து விட்டார். எனவே பா.ஜ.க ஆட்சி வெற்றி பெற்றால் மம்தா பானர்ஜியின் மாமுல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக அமித்ஷா கூறியுள்ளார்.