சட்டவிரோதமாக மண் அள்ளிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக மாரனேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைச்சாமிபுரத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மண் அள்ளி கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மண் அள்ளிய கனகராஜ், முத்துப்பாண்டி, வீரமணி, பாண்டிராஜா, சுவாமிதாஸ், பாண்டி ஆகிய 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.