Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவனை எப்படி லவ் பண்ணலாம்….? வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காதல் தகராறில் வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் உதயகுமார் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகிறார். இவருடன் பள்ளியில் படித்த தீபிகா என்ற பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயகுமாரும், அந்த பெண்ணும் காதலித்துள்ளனர். இதனை அடுத்து உதயகுமார் மோட்டார் சைக்கிளில் தீபிகாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த வாலிபர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தீபிகா ஸ்டீபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இருந்ததால் தீபிகா அவரை விட்டு விலகி விட்டார். அதன் பிறகுதான் தன்னுடன் பள்ளியில் படித்த உதயகுமாரை தீபிகா காதலித்துள்ளார். இது குறித்து அறிந்த ஸ்டீபன் கோபத்தில் இருவரையும் அரிவாளால் வெட்டியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக இருக்கும் அந்த வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |