சட்டவிரோதமாக சாராய ஊறல் போட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள சேத்துபேட்டை கிராமத்தில் கோத்தகிரி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு உள்ள ஒரு வீட்டின் பின்புறம் போடப்பட்டிருந்த 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக சரத்குமார் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.