வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை பகுதியில் லெனின் என்பவர் தனது மனைவி ரம்யாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த பெர்தின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் லெனின் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் அவரது மனைவி ரம்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அச்சமயம் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த பெர்த்தின் அங்கிருந்த டிவி, கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடித்து உடைத்ததுள்ளார். அதோடு ரம்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இசசம்பவம் குறித்து ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் குடுத்ததையடுத்து பெர்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.