மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியில் முக்கிய குற்றவாளியாக ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞர் கைதாகியுள்ளார்.
சுவிட்சர்லாந்து காவல்துறையினர் Graubuenden என்ற மாகாணத்தில் அந்த வழக்கறிஞரை கைது செய்திருக்கிறார்கள். இதற்காக, ஜெர்மன் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நபர், மோசடியை திட்டமிட்டு செய்ததாக ஜெர்மன் நாட்டின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள். மேலும் இந்த நபரால் பல பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய கஜானாக்கள் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சுமார் 10 வருடங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.