Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்றேன்” 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுப்பள்ளி பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதோடு, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவேந்திரன் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |