Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

3 மாதத்திற்கு முன்னாடியே…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற போது, கொண்டபள்ளி பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்ற வாலிபர் சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அதன்பின் வெங்கடேஷ் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஷை பிடித்து விசாரித்த போது அவரும், அந்த சிறுமியும் ஏற்கனவே பழகி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபருடன் சென்று விட்டார். அதன் பின் அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதனை அடுத்து மீண்டும் தன்னுடன் வருமாறு வெங்கடேஷ் அழைத்ததற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |