17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் மதுரைவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. இது குறித்து அறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை வீரன் 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் மதுரைவிரனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.