14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் பகுதியில் நேதாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி நேதாஜி அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
அதன் பின் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கிராம நிர்வாக அலுவலர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நேதாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.