கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது சசிகுமார் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவி கீரனூர் அனைத்து மகளிர் காவ்வல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் அளித்தார். இதனை ஏற்ற இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.