13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் 13 வயது சிறுமியை வசித்து வருகிறார். இந்நிலையில் பெற்றோர் வேளைக்கு சென்ற பிறகு இந்த சிறுமியை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதுபற்றி சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கோபாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.