Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. 4-வதாக திருமணம் செய்த நபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தினாலும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் ராதாகிருஷ்ணன் தனது மனைவிகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும், ராதாகிருஷ்ணனும் இடையே பேருந்து பயணத்தின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என அந்த பெண்ணிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். இதனால் 13 வயதுடைய தனது மகளை ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுக்க அந்தப் பெண் சம்மதித்துள்ளார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |