Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… பெற்றோரை தாக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கட்டிட தொழிலாளி 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதோடு, அவரது பெற்றோரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் முத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அதோடு முத்து அந்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரையும் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறையினர் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |