வாலிபர்கள் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் கிராமத்தில் பிரகாஷ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த உடன் அதே கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்ற வாலிபரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது அவரது தாய்க்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சிவக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.