17 வயது சிறுமியை ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கதிரேசனுக்கும், 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை கதிரேசன் திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். இது குறித்து அறிந்த ஜெயந்தி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.