Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்தியோடு சுற்றி திரிந்த நபர்…. பதற்றமான காங்கிரஸ் பிரமுகரின் வீடு…. போலீஸ் விசாரணை…!!

காங்கிரஸ் பிரமுகரின் வீட்டருகில் வாலிபர் கத்தியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான ரங்கபாஷியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சிவா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிவாவிடம் இருந்த கத்தி, பிளேடு போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |