Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகமா இருக்கு…. மடக்கி பிடித்து விசாரணை… கைது செய்த காவல்துறை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழாயிரம்பண்ணை சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அன்பின் நகரம் பகுதியில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பதும், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்ததோடு, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |