Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்த செலவும் நீதான் செய்யணும்… இப்படி கூட கடத்தலாமா… கைது செய்யப்பட்ட மதபோதகர்…!!

லாரி டிரைவர் கடத்தியதற்காக மதபோதகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ சபையை நடத்தி வந்துள்ளார். இவர் பூந்தமல்லி தேசியநெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி காரின் மீது உரசியதால் கார் சேதம் அடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மணிகண்டன் ரூபாய் 3 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக கொடுத்துள்ளார். ஆனால் அதனை மோகன்தாஸ் வாங்காமல் மாதவரத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் இடத்திற்கு வந்து காரை சரி செய்ய ஆகும் செலவை தருமாறு கூறி உள்ளார்.

இதனை அடுத்து மணிகண்டனை வியாசர்பாடி க்கு அழைத்து சென்று 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் மணிகண்டனை விடுவிக்க முடியும் என மோகன்தாஸ் தரப்பில் லாரியின் உரிமையாளரிடம் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லாரி உரிமையாளர் காவல்நிலையத்தில் மணிகண்டனை கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை மீட்டு அவரை கடத்தி சென்ற மோகன்தாஸ், அவரது கார் டிரைவர் மற்றும் நண்பர்களான ஐசக், அன்பு மற்றும் ஜீவா போன்றோரை கைது செய்து செய்தனர். அதன் பின் இவர்கள் மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |