Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்க இரண்டாவது பொண்ணும் வேணும்” மாமனார், மாமியாரை தாக்கிய மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை இரும்பு கம்பியால் வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மகள் ராஜேஸ்வரியை ஊத்துக்குளி பகுதியில் வசிக்கும் பிரபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ பரணி என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் பிரபு தனது மாமியார், மாமனாரிடம் ராஜேஸ்வரியின் தங்கையையும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பிரபு இருந்துள்ளார். இதனால் பிரபுவை சமாதானம் செய்து மகள் ராஜேஸ்வரியுடன் சேர்த்து வைக்க கருப்பசாமியும், சம்பூரணமும் முடிவு எடுத்தனர்.

இந்நிலையில் அவிநாசி முத்தூர் பிரிவு பகுதியில் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, பிரபு தனது மாமனார் மாமியாரிடம் ஏன் உங்களது இளைய மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த பிரபு அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தனது மாமனார் மாமியாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |