உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அண்ணியை திட்டி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டிமேடு பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேகர் இறந்துவிட்டார். இந்நிலையில் சேகரின் சகோதரரான மூர்த்தி என்பவர் சாந்தியை உல்லாசமாக இருப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த மூர்த்தி சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சாந்தி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.