கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் நின்ற பெண் மீது மர்ம நபர் தீ வைத்த சம்பவத்தில் அவர் மீது விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.
கனடாவின் ரொரன்ரோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஒரு நபர் திடீரென்று திரவத்தை ஊற்றியதோடு, நெருப்பு வைத்தார். இதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. தப்பிச் சென்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த நபரின் பெயர் டென்ஸின் நோர்பூ என்றும் அவருக்கு 33 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் மீது ஆயுத தாக்குதல், கொலை முயற்சி போன்ற 4 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரோத செயலின் அடிப்படையில் இங்கு குற்றம் நடந்திருக்கும் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.