Categories
உலக செய்திகள்

“அதற்காக இப்படியா செய்வது!”.. கத்தியால் குத்தி பலரை கொன்ற இளைஞர்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

சீனாவில் வேலையில்லாத விரக்தியில், இளைஞர் ஒருவர், தெருவில் நடந்து சென்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சீனாவில் உள்ள Anqing என்ற நகரத்தில் கடைகள் அதிகமுள்ள தெருவில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து சென்ற நபர்களை திடீரென்று ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 5 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 25 வயதுள்ள ஒரு இளைஞர்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://twitter.com/Atlantide4world/status/1401169970831237124

இந்நிலையில், அந்நகரத்தின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த இளைஞருக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே குடும்பம் நடத்துவதற்கு தேவையான பணம் இல்லாத ஆத்திரத்தில் நம்பிக்கையின்றி விரக்தியடைந்து இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 நபர்கள் காயமடைந்ததில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |